மஞ்சள் ஆற்றுப் பாதுகாப்புச் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டில் உயிரின சூழல் மேம்பாட்டில் பெரிய முன்னேற்றம்
மஞ்சள் ஆற்றின் பாதுகாப்புச் சட்டம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஓராண்டில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரினச் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
யாங்சி ஆற்றின் பாதுகாப்பு சட்டத்தையடுத்து, ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கான 2ஆவது சட்டமாக மஞ்சள் ஆற்றின் பாதுகாப்புச் சட்டம் திகழ்கிறது.
இந்த ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரின சூழல் பாதுகாப்பு மற்றும் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அது சட்ட ரீதியிலான உத்தரவாதத்தை கொண்டு வந்துள்ளது.
இச்சட்டம் அமலுக்கு வந்த கடந்த ஓராண்டில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஆறு, ஏரி மற்றும் நீர் தேக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தைச் சீன நீர் வள அமைச்சகத்தின் மஞ்சள் ஆற்றுக்கான நீர் வள ஆணையம் வலுப்படுத்தியுள்ளது.
உயிரின நீரோட்டத்தின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதன் மூலம், 10 முக்கிய ஆறுகளின் 20 கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நீரோட்டம் அனைத்தும் வரையறையைப் பூர்த்திச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.