சீனச் சர்வதேச நுகர்வுப்பொருட்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. உலகளவில் நுகர்வுப் பொருட்களை காட்சிப்படுத்தும் இப்பொருட்காட்சி, இரட்டை சுழற்சி முறையில் நுகர்வுப் பொருட்களை வாங்கும் மேடையாகவும் திகழ்கிறது.
பொருளாதார சுழற்சி என்பது, உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, வினியோகம், நுகர்வு ஆகிய 4 தொடர்புகளைக் கொண்டு உள்ளன. இதில் நுகர்வு என்பது முடிவு புள்ளியாகவும் அடுத்த சுழற்சியின் துவக்க புள்ளியாகவும் திகழ்கிறது.
எந்த ஒரு நாட்டின் பொருளாதார சுழற்சியிலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுழற்சி காணப்படும். புதிய வளர்ச்சி நிலைமையைக் கட்டியமைக்க வேண்டும் என்ற நெடுநோக்கை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
உள்நாட்டுச் சுழற்சி என்ற தலைப்பில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுழற்சிகள் ஒன்றை ஒன்று விரைவுபடுத்துவது இந்த நெடுநோக்கின் முக்கிய அம்சமாகும். இவ்வளர்ச்சி நெடுநோக்கு, சீனப் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதற்கு வழிநடத்தும். இரட்டை சுழற்சி என்ற சொல், சீனாவில் மிக வரவேற்கப்படுகின்ற சொற்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.