22வது ஷங்கரீலா பேச்சுவார்த்தை மே 30ம் நாளிரவு சிங்கப்பூரில் துவங்கியது. 40க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் அதிகாரிகள், பாதுகாப்பு அலுவலர்கள், நிபுணர்கள் உட்பட சுமார் 550 பேர் இதில் கலந்து கொண்டனர்.
நடப்பு ஷங்கரீலா பேச்சுவார்த்தையில், தைவான் பிரச்சினை பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, சீன மக்கள் விடுதலை படையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகப் பிரதிநிதி ச்சாங் ச்சு கூறுகையில், நல்லெண்ணம் மற்றும் முயற்சியுடன் தைவான் நீரிணை இரு கரையின் அமைதி ஒருமைப்பாட்டை இயன்றளவில் முன்னெடுக்க விரும்புகிறோம். தைவானை, தாய்நாட்டிலிருந்து பிரிக்க அனுமதிக்க மாட்டோம். சீன மக்கள் விடுதலை படை, போருக்காக மேற்கொண்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளும், சுதந்திர சக்தியை எதிர்த்து, ஒருமைப்பாட்டை முன்னெடுக்கும் முயற்சிகளும் நின்று விடாது என்று தெரிவித்தார்.
நடப்பு ஷங்கரீலா பேச்சுவார்த்தையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய 4 நாடுகள் கூட்டம் ஒன்றை நடத்தின. அவை, திறப்பு என்ற சாக்குப்போக்கில் பிரிவினையை ஏற்படுத்தி, தாராளம் என்ற பெயரில் பகைமையை உருவாக்கி வருகின்றன. இச்செயலுக்கு சீனா உறுதியான எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் ச்சாங் ச்சு கூறினார்.