சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 75-ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டக் கூட்டம் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், பாதை, கோட்பாடு, அமைப்புமுறை மற்றும் பண்பாடு ஆகியவற்றில் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்தி, முழுமையான செயல்முறைத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தை மேம்படுத்தி மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு அமைப்புமுறையின் அரசியல் ரீதியான சாதகங்களைப் பயன்படுத்தி, நிலைப்புத்தன்மையும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும் அரசியல் சூழலை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதோடு, புதிய யுகத்தில், பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, சீன நவீனமயமாக்கலை முன்னெடுக்கும் வகையில் மக்களை ஒன்றுதிரட்டி ஒருமித்த கருத்துக்களை உருவாக்கி, அறிவுத்திறமை மற்றும் சக்தியை ஒன்றுசேர்க்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.