சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனும் எலிசே மாளிகையில் மே திங்கள் 6-ஆம் நாள் மாலை, பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீன-பிரான்ஸ் தூதரக உறவு நிறுவப்பட்ட 60-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸில் 3-ஆவது அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சுதந்திரம் மற்று தற்சார்பு, பரஸ்பர புரிந்துணர்வு, உயரத்திலும் தொலை நோக்குடனும் யோசிப்பது, பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றி ஆகிய ஆரம்ப குறிக்கொள்கையை இரு தரப்பும் கடைப்பிடிப்பதோடு, யுகத்திற்கு ஏற்ப புதிய உள்ளடக்கத்தை ஊட்ட வேண்டும். தற்போதைய உலக சூழலில், சீனாவும் பிரான்ஸும், சுதந்திரம் மற்றும் தற்சார்புக் கொள்கையை பின்பற்றி, புதிய பனிப்போர் மற்றும் குழுக்களிடை பகைமை நிலை ஆகியவை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றிக் கோட்பாட்டைப் பின்பற்றி, பொருளாதார தொடர்பு மற்றும் விநியோகச் சங்கிலி துண்டிப்பு, தடையை உருவாக்குவது ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று கூறினார்.