JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொண்டது  

Estimated read time 1 min read

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தேசிய அளவிலான குரல்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், துருக்கிய கல்வி நிறுவனங்களுடனான அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் (MoU) நிறுத்தி வைப்பதாக ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் சைமா சயீத், ஜாமியா தேசத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் நிற்கிறது என்று கூறினார்.
தேசிய பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, துருக்கியின் மாலத்யாவில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான கல்வி ஒப்பந்தத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

You May Also Like

More From Author