சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.யூ.563 விமானம் 248 பயணிகளை ஏற்றிக்கொண்டு, 9ஆம் நாள் 13:02மணிக்கு ஷாங்காய் ஃபூதொங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறபட்டு புது தில்லிக்குச் சென்றது. 5 ஆண்டுகள் கடந்து, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சீனாவின் உள்நாட்டு விமானம் இயக்கும் முதல் விமான பயணம் இதுவாகும். இரு நாட்டு விமான பயணச் சேவையை சீனாவின் உள்நாட்டு விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் வழங்குவதை இது குறிக்கிறது. இந்த விமானப் பயணத்தில் இருக்கைகள் நிரம்பிய விகிதம் 95விழுக்காட்டைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
