சீனத் துணைத் தலைமையமைச்சர் ஹெ லீஃபெங் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி குரூப் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச நிதி நிறுவனங்களைச் சேர்ந்த உயர்நிலை நிர்வாகிகளை முறையே சந்தித்து பேசினார். சந்திப்புகளின்போது, நிதி துறை சார் அமைப்புமுறை ரீதியான திறப்பை விரிவாக்குவதில் சீனா பணியாற்றுகின்றது. வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் நீண்டகால மூலதனங்களும் சீனாவில் முதலீடு செய்வதை சீனா வரவேற்கின்றது என்று தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு முதல், சீனாவின் நிதி அமைப்புமுறையின் திறப்பு விரைவான பாதையில் நுழைய தொடங்கியது. நிதிதுறையில் சர்வதேசமயமாக்கல், வெளிப்படைத் தன்மை மற்றும் தரப்படுத்தல் குறித்து முன்னேற்றம் அடையும் சூழ்நிலையில், சீனா வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் சீனச் சந்தையில் பங்கேற்பதை வரவேற்கின்றது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் பத்திரங்கள் முக்கிய சர்வதேச முதலீட்டு குறியீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் முதிர்வு மற்றும் சர்வதேச புகழ் வேகமாக உயர்ந்துள்ளன. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் சீனச் சந்தையில் தனது வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, அவற்றின் சொத்து அளவு சீராக அதிகரித்து வருகின்றது. மேற்கூறிய உண்மைகள், சீனச் சந்தையின் வளர்ச்சிக்கான நேரடி ஆதாரமாகும்.
மேலும், இவ்வாண்டிலிருந்து, சீன நிதி நிறுவனங்கள் பொருளாதாரத்துக்கு சேவை வழங்கும் திறனை தொடர்ந்து அதிகரித்து, நிதி துறையின் சீர்திருத்தம் மற்றும் திறப்பை ஆழமாக்க செயல்பட்டு வருகின்றது. இவ்வாண்டில், சீனாவின் மத்திய வங்கி, ஆதரவான பணவியல் கொள்கையைப் பின்பற்றுவதோடு, பலமுறை அதன் நாணய கொள்கையை சரிப்படுத்தி செயல்பட்டுள்ளது. அடுத்து, சீன மத்திய வங்கி, பொருளாதாரத்தின் சீரான மற்றும் தரமான வளர்ச்சிக்கு உகந்த நாணய மற்றும் நிதி சூழ்நிலையை உருவாக்குவதில் தொடர்ந்து பணியாற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.