கரை புரண்டோடும் வெள்ளம் : சலால் அணை திறப்பு!

அதிக நீர் வரத்து காரணமாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை திறக்கப்பட்டது.

செனாப் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சலால் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

You May Also Like

More From Author