புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இது குறித்து நாடாளுமன்றத்தில், திபெத் தொடர்பான அனைத்துக் கட்சி குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
90 வயதான தலாய் லாமா, சீனாவின் அழுத்தத்தையடுத்து 1959-ல் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தற்போது ஹிமாசலப் பிரதேசத்தில் வசித்து வருகிறார்.
இந்தியாவில் ஆன்மீக, அமைதியின் சின்னமாக வணங்கப்படுகிறார்.
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
