சத்தீஸ்கரில் உள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் அமைந்துள்ளது.
கனமழை பெய்து வருவதால் சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனைக் காணவும், இயற்கை அழகைக் கண்டு ரசிக்கவும் இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.