ரஷிய-சீன ஒத்துழைப்பு சர்வதேச விவகாரங்களில் நிலைப்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும் : புதின்

ரஷியா மற்றும் சீனா இடையேயான ஒத்துழைப்பு, தற்போது இன்னும் சர்வதேச விவகாரங்களில் நிலைமையை நிலைப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலைகளைக் கட்டியமைத்து வருகின்றன. தொழிற்துறையிலும் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன என்று ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் 5ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று அந்நாட்டின் சோச்சி நகரில் நடைபெற்ற வால்டை விவாத மன்றத்தின் ஆண்டுக்கூட்டத்தில் செய்தியாளருக்குப் பதிலளித்த போது புதின் இதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒருமண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, நல்ல எதிர்காலமுடையது என்று குறிப்பிட்ட அவர், யூரேசியா பொருளாதார ஒன்றியம் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்புடனான இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நடைமுறையில் கொண்டு வர ரஷியாவும் சீனாவும் பணியாற்றி வருகின்றன என்று தெரிவித்தார்.


2004ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட வால்டை விவாத மன்றக் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இது, உலக நாடுகளின் அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் முக்கிய அரங்கமாக விளங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author