சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் புதிய தகவலின்படி, நிலா விழா மற்றும் தேசிய விழா விடுமுறையின் முதல் 7 நாட்களில், உள்நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 75.4 கோடியைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 78.9 விழுக்காடு அதிகரித்தது.
சுற்றுலா வருமானம், 66 ஆயிரத்து 809 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 132.6 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.