ஹைதாராபாத் பேக்கரியில் தீ விபத்து!

ஹைதாராபாத்தில் மாலக்பேட் காவல் சரகத்துக்கு உட்பட்ட மூசராம்பாக் பகுதியில் உள்ள பேக்கரியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விபத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author