ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பது ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அவரது பதவியேற்பு விழா ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க்கவிருப்பதனால் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு தேதி மாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், பிரதமர் மோடி நேற்று, புதன்கிழமை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நாள் ஒத்திவைப்பு என தகவல்
