பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களும் இன்று அவருடன் பதவியேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முழு அமைச்சரவையின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தற்போதைக்கு 30 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருக்கும் உயர்மட்ட அமைச்சர்கள் மட்டும் இன்று பதவியேற்பார்கள்.
அந்த உயர்மட்ட அமைச்சகங்கள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும்.
எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் அமைச்சர்களும் இன்று பதவியேற்க வாய்ப்புள்ளது.