ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார்

ஒடிசாவின் புதிய முதல்வராக 7 முறை MLA வாக இருந்த பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவி ஏற்கிறார்.
இந்த அறிவிப்பை, புவனேஷ்வரில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக அரசாங்கத்தில் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகிய இரு துணை முதலமைச்சர்கள், மோகன் சரண் மாஜிக்கு உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று மாலை ஒடிசா முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இதில் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகா பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author