சீனாவினால் முன்வைக்கப்பட்டு உலகத்துக்கு நன்மை அளிக்கும் முன்மொழிவு

பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய 3ஆவது மன்றக்கூட்டத்தில் 130க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு கடந்த 10 ஆண்டுகளில் பல சாதனைகளைப் பெற்று, உலகத்துக்கு நன்மை பயத்து வருகின்றது. இது இந்த முன்மொழிவு மிகவும் வரவேற்கப்பட்ட காரணம் ஆகும்.
வளர்ச்சி என்பது, எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் சாவியாகும். கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் வகையில், ஆரம்பக் கட்டத்தில் இருந்தே, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு அடிப்படை வசதிகளின் கட்டுமானம் உள்ளிட்டமக்களின் வாழ்வாதாரத் திட்டப்பணிகளுக்குப் பொருளாதாரவளர்ச்சியை வழிநடத்தியது.


புள்ளிவிவரங்களின் படி, 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் ஒத்துழைப்பு நாடுகளில் சீனா நேரடியாக முதலீடு செய்த மொத்த தொகை 24 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதைத் தவிர, வறுமை குறைப்புத் துறையில், மெக்கின்சி தொழில் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, ஆப்பிரிக்காவில் உள்ள சீனத் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட உள்ளூர் வேலையாட்களின் விகிதம் 89 விழுக்காட்டை எட்டியுள்ளது. இது உள்ளூர் வேலை வாய்ப்புகளின் அதிகரிப்பைப் பயனுள்ள முறையில் முன்னெடுத்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் தொடர்புடைய முதலீடு மூலம்,ஒத்துழைப்பு நாடுகளில் 76 இலட்சத்துக்கும் மேலான மக்கள் தீவிர வறுமையிலிருந்தும் 3 கோடியே 20 இலட்சம் மக்கள் மிதமான வறுமையிலிருந்தும் விடுவிக்கப்படும் என்றும் உலக வங்கி எதிர்பார்க்கப்படுகிறது.


தவிரவும், இந்த முன்மொழிவின் மூலம், அந்த நாடுகளிலுள்ளமக்களுக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வும் தொடர்புகளும்ஆழமாகி, நாகரிகங்களின் பரஸ்பர பரிமாற்றம்முன்னேற்றப்பட்டு வருகின்றது.

பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறையில் ஒத்துழைப்பு ஆவணங்களில் சீனாவும் 144 நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. சீனாவிற்கும் மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான பண்டைய நகரமறுசீரமைப்பு திட்டம் யுனெஸ்கோவால் மிகவும்பாராட்டப்பட்டது.

பண்பாட்டுப் பரிமாற்றம் மூலம் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான பொது மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author