வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நேரத்தில், சைலன்ட் கில்லரான, ஹீட் ஸ்ட்ரெஸ் அல்லது வெப்ப அழுத்தம் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம்.
உடலின் இயற்கையான குளிரூட்டும் அமைப்புகள் அதிகமாக வேலை பார்க்க நேரும்போது வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது.
இது தலைச்சுற்றல், தலைவலி முதல் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்பு வரையிலான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
உடலின் உள் தெர்மோஸ்டாட்டில் கோளாறை ஏற்படுத்தும், அதீத வெப்பநிலையில் நீண்ட நேரமாக வெளிப்படுதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் இது ஏற்படுகிறது.