“படிப்பு மட்டும் போதாது, காதலும் வேணும்!” என மாணவர்களுக்கு அதிரடியாக விடுமுறை அறிவித்துள்ளது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் புகழ்பெற்ற விமானப் போக்குவரத்து பல்கலைக்கழகம் தான் இந்த விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மாணவர்களுக்கு ‘வசந்தகால விடுமுறை’ (Spring Break) வழங்கப்படுவதாக அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெறுமனே விடுமுறை மட்டும் கொடுக்காமல், “இந்த நாட்களில் இயற்கையை ரசியுங்கள், மலர்களைக் கண்டு மகிழுங்கள், முக்கியமாகக் காதலை அனுபவியுங்கள்” என மாணவர்களுக்குப் பல்கலைக்கழகம் வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்கள் சமூகத்தோடு ஒன்றிணையவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் இந்த ‘காதல் விடுமுறை’ அறிவிப்பு இப்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

