நாட்டிங்ஹாமைச் சேர்ந்த 29 வயது பெண் சோஃபி டவுனிங், தற்செயலாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறிய விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ்மஸ் பரிசாகக் கிடைத்த 10 பவுண்ட் மதிப்புள்ள ‘200 Degrees Coffee’ வவுச்சரை எடுத்துக்கொண்டு காபி கடைக்குச் சென்ற சோஃபிக்கு, அங்கிருந்த மெஷின் காட்டிய பேலன்ஸ் தலைசுற்ற வைத்துவிட்டது.
அவரது கார்டில் சுமார் 63 குவாட்ரில்லியன் பவுண்ட் (63 Quadrillion) பணம் இருப்பதாகத் திரை காட்டியது. இது உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட ஒரு லட்சம் மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த மெகா அதிர்ஷ்டத்தில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. அந்தப் பணத்தை அவர் ரொக்கமாக எடுக்க முடியாது, அந்த குறிப்பிட்ட காபி கடையில் காபி மற்றும் ஸ்நாக்ஸ் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். இது ஒரு டிஜிட்டல் ஸ்கேனிங் குளறுபடி என்று தெரிந்தாலும், சோஃபி மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றபோது அதே பேலன்ஸ் நீடித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பை விட 670 மடங்கு அதிகமான தொகையைக் கையில் வைத்திருந்தும், சோஃபி அதை மீண்டும் பயன்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன வவுச்சர் பிழை, ஒரு சாதாரண பெண்ணைத் தாளில் மட்டும் உலகப் பெரும் பணக்காரராக மாற்றியிருக்கிறது.
