தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல்…
நிரந்தரப் பணியாளர்களைப் போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது…இந்த அறிவிப்பு ஒப்பந்த செவிலியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்த செவிலியர்களுக்கு மொத்தம் 186 நாட்கள் ( 6 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தொடர் போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை ஏற்றது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள்…
