திருமால்பாடி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Estimated read time 1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், திருமால்பாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

யாக குண்டத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மேலும் சாற்றுமுறை வைபவம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகள், மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Aஇந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மாலை கருடசேவை வைபவம் நடைபெற்றது.

You May Also Like

More From Author