இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடு

Estimated read time 1 min read

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.

தமிழக சட்டபேரவைக்கு ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை, தேர்தலையொட்டி, மாநிலம் முழு தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்றது. இதன்படி, கடந்த டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு முன், வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடந்தது.

இப்பணியின் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் ஓட்டு உள்ள வாக்காளர்கள், இறந்தவர்கள் என, 97 லட்சம் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட் டியல் வெளியான பின், விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஜன., 30 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்க்கக்கோரி 22.83 லட்சம்; பெயர் நீக்கக்கோரி 2 லட்சம், திருத்தம் கோரி 9.90 லட்சம் என மொத்தம், 34.76 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இவற்றை ஆய்வு செய்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதன்படி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரத நிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிடுவார். பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் படி தமிழகத்தில் 5.65 கோடி வாக்காளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author