ஈபிஎஸ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், பாஜகவோடுதான் கூட்டணி வைத்துள்ளேன் என்றும் அவர் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும், அதற்கு அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் இந்த திடீர் பேச்சு, ஏற்கனவே அமைந்துள்ள கூட்டணிக்குள் குழப்பத்தையும் விரிசலையும் ஏற்படுத்துமோ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.
