உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 % அதிகரிப்பு – தெற்கு ரயில்வே

Estimated read time 1 min read

உதகை மலை ரயில் பயணச்சீட்டு கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

உதகை மலை ரயிலின் கட்டணம் கடைசியாக 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி உயர்த்தப்பட்டதாகவும், அதன் பிறகு அதிகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் – குன்னூர், குன்னூர் – உதகை மற்றும் மேட்டுப்பாளைம் – உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலின் இயக்கச் செலவுகள், பராமரிப்பு செலவுகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன.

இதை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரயில் பிரிவில் சாதாரண ரயில்களின் அடிப்படை கட்டணம், பிப்ரவரி 21ம் தேதி சனிக்கிழமை முதல் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author