ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்கப் போவதில்லை…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இதனை தொடர்ந்து 547 வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி பேருந்துகளை இயக்கும் திட்டம் இல்லை என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு பேருந்தை பதிவு செய்வதற்கே ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதால் மறுப்பதிவு செய்வதற்கு அரசு சிறப்பு முகாம் அமைத்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author