தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகின்ற 23ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு வருகின்ற 21ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author