சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிக்காச்செ நகரத்திலுள்ள திங் ரி மாவட்டத்தில் 6.8 ரிக்டர் அளவு கோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டது. பல வீடுகள் தரைமட்டமாயின.
இந்நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதற்கு முக்கியத்துவம் அளித்து முக்கிய உத்தரவிட்டார்.
அவர் கூறுகையில், இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாகக் கண்டறிந்து பாதுகாக்க வேண்டும். காயமடைந்த மக்களுக்கு முழுமூச்சுடன் சிகிச்சையளிக்க வேண்டும். உயிரிழப்புகளை இயன்ற அளவில் குறைத்து, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இரண்டாம் பேரழிவுகளைத் தடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் மீது உரிய முறையில் குடியமர்த்துதல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பூகம்பங்கள் தொடர்பான கண்காணிப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை சரியான நேரத்தில் வினியோகிக்க வேண்டும்.
சேதமடைந்த உள்கட்டமைப்பைக் காலத்தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்க்கையை ஏற்பாடு செய்து, பாதுகாப்பான மற்றும் இதமான குளிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.