இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றது போல மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சிம்கார்டு, ரேஷன் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது.
இதனிடையே ரிசர்வ் வங்கி சார்பில் நாட்டு மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், பரிவர்த்தனைகளுக்கு விரல் ரேகையை பதிவிடும் முன்பு அந்த கருவியில் மெல்லிய கண்ணாடித்தாள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து இல்லை என உறுதி செய்யும்படியும் விரல் ரேகை சேகரிப்பு ரசீதை பெறும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.