லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்  

Estimated read time 1 min read

லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை வெளியிட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் ஜான்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங்.
இந்த விரிவாக்கத்திற்கு முன், லடாக் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது:

லே மற்றும் கார்கில்.
லே ஆறு துணைப் பிரிவுகளையும், கார்கில் நான்கு பிரிவுகளையும் கொண்டிருந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது: ஜம்மு காஷ்மீர்(அதன் சொந்த சட்டமன்றம்) மற்றும் லடாக் (சட்டமன்றம் இல்லை).

Please follow and like us:

You May Also Like

More From Author