ரஜினி பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…. சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு அடுத்த மாதம் ரஜினியின் பிறந்த நாளான 12 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களுக்கு அன்று மிக பெரிய விருந்து காத்திருக்கிறது.

Please follow and like us:

More From Author