சுங்க வரி வழக்கு பற்றிய தீர்ப்பு ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் 20ஆம் நாள் வெளியிட்டது. சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்திற்கிணங்க, வர்த்தக கூட்டாளிகளின் மீதான சமமான சுங்க வரி மற்றும் ஃபென்தானில் சுங்க வரி உள்ளிட்ட சுங்க வரியை வசூலித்த அமெரிக்க அரசு சட்டத்தை மீறியது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,
அமெரிக்க உச்சி நீதி மன்றம் அளித்த இத்தீர்ப்பில் சீனா கவனம் செலுத்தியுள்ளது. தொடர்புடைய அம்சங்கள் மற்றும் பாதிப்பை நாங்கள் மதிப்பிடுகிறோம். எந்த வழிகளிலுள்ள ஒரே தரப்பு கூடுதல் சுங்க வரி வசூலிப்பைச் சீனா உறுதியாக எதிர்க்கின்றது.
பாதுகாப்புவாதத்திற்கு எதிர்காலம் இல்லை. வர்த்தக கூட்டாளிகளின் மீது கூடுதல் சுங்க வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுக்கின்றது என்றார்.
