“என்னோட புகுந்த வீடு தமிழ்நாடு!”… மதுரையில் அதிரடி காட்டிய ரோஜா.. நடிகை சொன்ன அசத்தலான சீக்ரெட்…!!! 

Estimated read time 0 min read

மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற தென்மண்டல ரெட்டி மாநில மாநாட்டில் கலந்துகொண்ட நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ரோஜா, உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

தான் தமிழ்நாட்டின் மருமகள் என்பதைப் பெருமையுடன் குறிப்பிட்ட அவர், சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்ததற்கும், தற்போது அரசியலில் சாதிப்பதற்கும் மக்களின் ஆசிர்வாதமே முக்கியக் காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், ரெட்டி சமூகத்தினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு மறுப்பதாகக் குற்றம் சாட்டிய ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த மாநாட்டில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author