கிம் ஜுன் உனுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், கிம் ஜுன் உன்னுக்கு செய்தி அனுப்பி, கொரிய தொழிலாளர் கட்சியின் 9ஆவது தேசிய மாநாட்டில் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இச்செய்தியில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,

வடகொரிய கட்சி, அரசு, மக்கள் ஆகியோர் கிம் ஜுன் உனின் மீது நம்பிக்கையையும் வரவேற்பையும் கொள்கின்றனர் என்பதை இது வெளிகாட்டியது. தேசிய வளர்ச்சி முக்கிய காலத்தில் இருந்த நிலைமையில், வெற்றிகரமாக நடைபெற்ற இந்த தேசிய மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது செயலாளரை மையமாக கொண்ட கொரிய தொழிலாளர் கட்சியின் தலைமையில், வடகொரிய கட்சி மற்று மக்கள், இந்த மாநாட்டை வாய்ப்பாக கொண்டு, வடகொரிய சொஷலிச இலட்சியத்தின் வளர்ச்சியை இடைவிடாமல் முன்னேற்றி வருகின்றது என்று வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார்.

கிம் ஜுன் உன்னுடன் இணைந்து, எட்டப்பட்டுள்ள பொது கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்புகளின் தொடர்புடைய வாரியங்களுக்கு வழிகாட்டி, பிரதேச மற்றும் உலக அமைதி, நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author