புருனையின் 42ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 23ஆம் நாள் புருனையின் 2ஆவது வெளியுறவு அமைச்சர் எரிவானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில் புருனை சுதந்திரம் பெற்ற 42ஆவது ஆண்டு நிறைவுக்கு வாங்யீ வாழ்த்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சீன-புருனை பாரம்பரிய நட்புறவு நிலையாகவும் உறுதியாகவும் இருப்பதோடு, இரு நாட்டுறவும் சீரான வளர்ச்சிப் போக்கையை நிலைநிறுத்தி வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களை வழிக்காட்டலாகக் கொண்டு, இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு தரப்பும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், சீன-புருனை பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை பயனுள்ளதாகவும் ஆழமாகவும் முன்னேற்ற வேண்டும் என்றும் வாங்யீ விருப்பம் தெரிவித்தார்.
