அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டில் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் வெளியிட்டது. அமெரிக்க அரசியல், பணத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. கட்சிசார் நலன்கள் வாக்காளர்களின் உரிமைகளுக்கு மேல் உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், அமெரிக்காவில் வீடுவாசலின்றி அல்லல்பட்டவர்கள் எண்ணிக்கை, 7 இலட்சத்துக்கும் மேலாகப் பதிவு செய்து புதிய உச்சத்தை எட்டியது. இது 2023ல் இருந்ததை விட 18.1 விழுக்காடு அதிகம். மேலும், விலையுயர்ந்த சுகாதார சேவைகள் மற்றும் காப்பீட்டு அமைப்புகளால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர்.
அடிக்கடி நிகழும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பள்ளியில நடைபெறும் துப்பாக்கிச் சூடுகளும் அந்நாட்டு மக்களைப் பாதித்துள்ளன. 2024ல் அமெரிக்காவில் பெரிய அளவில் 503 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 45 பள்ளி துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களும் ஏற்பட்டுள்ளன. 1,400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் துப்பாக்கி வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆகரவு அளித்ததாக இந்த இந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது. பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் 2023 அக்டோபரில் இருந்து தற்போதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் காயமடைந்தும் பாதிப்புக்குள்ளாகினர். காசாவின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் இடம்பெயர்வுக்குள்ளாகினர்.