சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் துவங்கிய 88ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய இன விடுதலை மற்றும் உலக அமைதிக்காக என்ற தலைப்பிலான கண்காட்சியின் துவக்க விழா, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்ட நினைவகத்தில் 7ஆம் நாள் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் இயக்குநருமான சைய் ஜி இத்துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
88 ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பானிய ராணுவப் படை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய லூகோசியௌ சம்பவத்தைத் தொடுத்து, சீனா மீது பன்முக ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தது. சீனாவின் இராணுவப் படையினரும் மக்களும் மாபெரும் முயற்சியுடன் எதிர்த்து, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தின் முழுமையான வெற்றியை பெற்றனர். உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போரின் வெற்றிக்கு சீனா முக்கிய பங்காற்றியுள்ளது.
புதிய யுகத்தில், ஜப்பானிய ஆகிரமிப்பு எதிர்ப்புக்கான போரின் மகத்தான எழுச்சியை வெளிக்கொணர்ந்து, புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனை என்ற வழிகாட்டலின் அடிப்படையில், சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசை உருவாக்கி, சீன நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி எனும் உன்னத இலட்சியத்திற்கு புதிய மேன்மேலும் பங்காற்ற வேண்டும் என்றார்.