ஆகஸ்ட் 5 முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் – சபாநாயகர் அறிவிப்பு..!!

Estimated read time 1 min read

தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-2026-27 நிதி ஆண்டிற்கான தமிழக வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்குச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நாளில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பட்டியலிட்டு பேசுவார். அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பல்வேறு அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று தெரிகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500

You May Also Like

More From Author