சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 3ஆம் நாள் நண்பகல் அஸ்தானாவில் கசகஸ்தான் அரசுத் தலைவர் டோகாயேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அவருடன் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், நானும் அரசுத் தலைவர் டோகாயேவும் நட்பார்ந்த பயன்மிக்க பேச்சுவார்த்தையை நடத்தி, பரந்துபட்ட பொது கருத்துக்களை எட்டி, இரு நாட்டு கூட்டறிக்கையில் கூட்டாக கையொப்பமிட்டோம். பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், ஒன்றுக்கொன்று இணைப்பு மற்றும் தொடர்பு, எரியாற்றல், வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பண்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளுடன் தொடர்பான இரு நாட்டு ஒத்துழைப்பு ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இரு நாட்டுறவின் உயர் தர வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை இது வழங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தை முன்னோக்கி பார்த்து, இரு நாட்டு பாரம்பரிய நட்புறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பின் வளர்ச்சி மீது முழு நம்பிக்கை கொள்கிறோம் என்று வலியுறுத்தினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானத்தில் கூட்டாக பங்கெடுத்து, இரு நாட்டு ஒத்துழைப்பு மேலதிக புதிய சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, சீன-மத்திய ஆசிய அமைப்பு முறை உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளின் கட்டுக்கோப்புக்குள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கசகஸ்தான் பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் சேர்ந்து, உலக மேலாண்மைக்குப் பங்காற்றுவதை சீனா ஆதரிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டோகாயேவ் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது, கசகஸ்தான்-சீன உறவு மேலும் உயர்ந்த நிலையை நோக்கி வளர்ந்து வரும் புதிய துவக்கப் புள்ளியாக இருக்கும். சீனா, கசகஸ்தானின் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாகும். கசகஸ்தானில் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு, கசகஸ்தானின் வளர்ச்சியை பெரிதும் முன்னேற்றியுள்ளது. சீனாவுடன் இணைந்து, சீன-மத்திய ஆசியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஐ.நா உள்ளிட்ட பல தரப்பு கட்டுக்கோப்புக்குள் தொடர்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவு மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.