“நாகரிகத்தின் வழியாக பயணம்” என்னும் தலைப்பில் சீன ஊடகக் குழுமம் எகிப்தில் நடத்தும் சிறப்புக் கண்காட்சியின் துவக்க விழா அக்டோபர் 26ஆம் நாள் கெய்ரோ நகரில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
எகிப்திலுள்ள சீனத் தூதரகத்தின் பிரிதிநிதிகள், எகிப்தின் பண்பாட்டு மற்றும் ஊடகத் துறையினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேலானோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர்.
ஷென் ஹாய்சியொங் கூறுகையில், நீண்டகால வரலாற்றில் சீனா மற்றும் எகிப்தின் நாகரிகம், மனித குல நாகரிக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தற்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் வழிக்காட்டலில், சீன மக்கள் சீனத் தேசத்தின் நவீன நாகரிகத்தை வளர்த்து, மனித குல நாகரிகத்தின் புதிய வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றனர்.
சீன-அரபு நாட்டு மக்களின் நட்புறவையும், சீன-அரபு நாட்டுப் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தையும் முன்னேற்றுவதற்கு சீன ஊடகக் குழுமம் அறிவாற்றலை வழங்கும் என்றார்.
இக்கண்காட்சி நவம்பர் 2ஆம் நாள் நிறைவுப் பெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.