ஜனநாயகம்: மனித குலத்திற்குப் பொதுவான விழுமியம் என்ற தலைப்பிலான 2 ஆவது சர்வதேச மன்றக்கூட்டம் மார்ச் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. 100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் மேலான பிரதிநிதிகள் நேரடியாகவும் இணைய வழியாகவும் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
இக்கூட்டத்தில்,“ஜனநாயகம் மற்றும் உலக மேலாண்மை”, “ஜனநாயகம் மற்றும் பல்வகை நாகரிகம்”, “ஜனநாயகம் மற்றும் நவீனப் பாதை” உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பல்வேறு நாடுகளின் முன்னாள் அரசியல் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் ஆகியோர் விவாதம் நடத்தினர்.
பல்வேறு நாடுகள் உலகம் முழுவதிலுமுள்ள பல்வகை நாகரிகங்களுக்கு மதிப்பு அளித்து, அனைவரையும் உள்ளடக்கும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் கருத்துடன் உலகளவில் பல்வேறு சவால்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.