தேவையான பொருட்கள்
மிளகு – ஒன்றரை ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – அரை ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காளான் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
மல்லித் தழை – சிறிதளவு
செய்முறை
மிளகு, சீரகம், சோம்பு மசாலா பொருட்களை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன், மஞ்சள் தூள், காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக தயார் செய்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மூடிவைத்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி பரிமாறவும்.