தபால் நிலையங்களில் பல்வேறு திட்டங்களில் மக்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். இந்த திட்டங்களின் வட்டி விகிதம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். அதன்படி 2024 ஜனவரி – மார்ச் காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி 3 வருட கால வைப்புத் தொகையின் வட்டி விகிதம் ஏழு சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்:
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – 8.2%
சுகன்யா சம்ரிதி யோஜனா – 8.2%
தேசிய சேமிப்புச் சான்றிதழ் – 7.7%
5 ஆண்டு வைப்பு – 7.5%
கிசான் விகாஸ் பத்ரா – 7.5%
மாதாந்திர வருமான கணக்கு – 7.4%
பொது வருங்கால வைப்பு நிதி – 7.1%
3 ஆண்டு வைப்பு – 7.1%
2 ஆண்டு வைப்பு – 7%
1 ஆண்டு வைப்பு – 6.9%
5 ஆண்டு தொடர் வைப்பு – 6.7%
சேமிப்பு கணக்கு – 4.0%