மீண்டும் வட்டி விகித உயர்வை நிறுத்தி வைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்று அமெரிக்க ஃபெடரல் வங்கி 1ஆம் நாள் முடிவெடுத்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி தொடர்ந்து 2ஆவது முறையாக வட்டி விகித உயர்வை நிறுத்தி வைத்தது.

தற்போது, அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதம் 5.25 முதல் 5.50 விழுக்காடு வரை வரம்புக்குள் உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய பணவீக்க விகிதம் இன்னும் உயர் நிலையில் இருக்கிறது என்று இந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளையில் அமரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்து சந்தையில் கவலை எழுந்து கொண்டிருக்கிறது. இத்தகைய உயர் விகிதம் எவ்வளவு காலம் நீட்டிக்கும் என்றும் சந்தையில் விவாதிக்கப்படுகிறது.


.2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல், வட்டி விகித உயர்வை தொடங்கி வைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி தற்போது வரை 11 முறை வட்டியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author