சீன மின்னணு வணிகச் சரக்கு போக்குவரத்து குறியீடு அதிகரிப்பு

மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீட்டைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஏப்ரல் 3ஆம் நாள் வெளியிட்டது. மார்ச் திங்களில் சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீடு தெளிவாக அதிகரித்துள்ளது. மொத்த வணிக அளவு குறியீடு கடந்த இரு ஆண்டுகளில் புதிய உச்சத்திற்கு உயர்ந்தது.

மார்ச் திங்களில், சீன மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்து குறியீடு, 112.5 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 1.1 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இக்குறியீட்டைப் பொறுத்தவரை, மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்தின் மொத்த வணிக அளவு குறியீடு தெளிவாக அதிகரித்துள்ளது. மார்ச் திங்களில், மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்தின் மொத்த வணிக அளவு குறியீடு, 126.4 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 4.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது. பிராந்தியங்களைப் பொறுத்தவரை, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது.

இதைத் தவிர, கிராமப்புறங்களில் மின்னணு வணிக அலுவலுக்கான சரக்கு போக்குவரத்தின் மொத்த வணிக அளவு குறியீடு மீண்டும் உயர்ந்தது. மார்ச் திங்களில், இக்குறியீடு, 127.7 புள்ளிகளாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 3.4 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author