மோசடிக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள போயிங் நிறுவனம் ஒப்புதல்

உலகம் செய்தி:

அமெரிக்க நீதித் துறையுடனான ஒப்பந்தம் ஒன்றில், தன் மீதான குற்றவியல் மோசடி குற்றச்சாட்டில் குற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கு போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஜுலை 7ஆம் நாள் அமெரிக்க அரசு அதிகாரி ஒருவரின் தகவலை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டது.
2018, 2019ஆம் ஆண்டுகளில், போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தச் சம்பவங்களில் மொத்தம் 346 பயணிகளும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டு ஜனவரி, அமெரிக்க நீதித்துறை போயிங் நிறுவனம் மீது குற்றவியல் ரீதியான வழக்குத் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author