சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் ஹுனான் மாநிலத்தில் பார்வையிட்டார். அவர் கூறுகையில்,
புதிய வளர்ச்சி முறையை உருவாக்குவதில் அதன் நெடுநோக்கு நிலைப்பாட்டை ஹுனான் மாநிலம் உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலையான முன்னேற்றத்தின் பணித் திசையிலும், உயர்தர வளர்ச்சியிலும் சீர்திருத்த மற்றும் புத்தாக்கத்திலும் உண்மையைத் தேடுவது மற்றும் நடைமுறையிலும் ஊன்றி நிற்க வேண்டும். நாட்டின் முக்கியமான முன்னேறிய உற்பத்தி தொழிற்துறை, முக்கிய போட்டித்திறன் கொண்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம், உள்நாட்டுப் பகுதிகளில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, மத்திய பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் யாங்சீ நதி பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவற்றில் ஹுனன் தொடர்ந்து பாடுபடும் என்றார்.
மார்ச் 18ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரை, சாங்ஷா, சாங்டே முதலிய நகரங்களில் ஷிச்சின்பிங் முறையே பார்வையிட்டார். பள்ளிகள், நிறுவனங்கள், வரலாற்று பயணம் மற்றும் பண்பாட்டு பகுதி மற்றும் கிராமங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
21ஆம் நாள் காலை ஹுனான் மாநிலத்தின் கட்சி குழு மற்றும் மாநில அரசின் பணி அறிக்கையைக் கேட்டறிந்தார். ஹுனானில் பல்வேறு பணிகளில் பெற்றுள்ள சாதனைகளை அவர் உறுதிப்படுத்தினார்.