ரேஷன் அட்டைதாரர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அவ்வபோது அரசு பல சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் இன்று ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் பெற இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும் இந்த முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author