தமிழக அரசின் அடுத்த செக்..! காலை 10 மணிக்கு முன்னதாக அலுவலகம் வர உத்தரவு..!

Estimated read time 1 min read

பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பு செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்னதாக அலுவலகம் வந்து விட வேண்டும். அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் (Record Clerks) ஆகியோர் காலை 9.30 மணிக்கு அலுவலகம் வந்து விட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், தலைமைச் செயலகத்தில் எடுத்த நடவடிக்கையை பின்பற்றி இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் மற்றும் துறை சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வராமல் காலதாமதம் செய்வதாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author